ழைவுத் தேர்வு ரத்து: தீர்ப்பு ஒத்திவைப்பு- இடைக்காலத் தடை வரலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நுழைவுத் தேர்வு ரத்து வழக்கு விவகாரத்தில் இன்று இரு தரப்பு விவாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததைக் கண்டித்து தொடரப்பட்டுள்ளநூற்றுக்கணக்கான மனுக்கள் நேற்று தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாமுன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் ராவ், அட்வகேட்-ஜெனரல் என்.ஆர்.சந்திரன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல்சோமயாஜி ஆகியோர் ஆஜராயினர். முதலில் மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

மனுக்களை விசாரிக்கத் தொடங்கும் முன்பாக தலைமை நீதிபதி கட்ஜூ சில கருத்துக்களைத் தெரிவித்தார். அவர்கூறுகையில், பொதுவாக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது.

ஆனால் தற்போது இந்தப் பிரச்சினையில் அரசு எடுத்துள்ள முடிவு சட்டவிரோதமானது என்று மாணவர்கள்தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாகத் தான் வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த புகாரை மாணவர் தரப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே அரசின்முடிவில் நீதிமன்றம் தலையிடும். இல்லாவிட்டால் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

இதன் அடிப்படையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட கோருகிறோம் என்று கூறி விசாரணையைத்தொடங்கினார்.

பின்னர் மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், நுழைவுத் தேர்வும்,இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன.

இந்த நிலையில் அவற்றின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தாமல், பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள்அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்ககை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது சரியான நடவடிக்கைஅல்ல.

நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகளின் அடிப்படையில் தர வரிசையை நிர்ணயிக்க வேண்டும்என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கட்ஜூ, நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ரேங்க் பட்டியலை அரசுதயாரித்து வெளியிட்டுள்ளதா என்று கேட்டார். அதற்கு மாணவர் தரப்பு வழக்கறிஞர் இல்லை என்றார்.

அப்படியென்றால் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டுதான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றுகோர முடியாது என்றார் கட்ஜூ.

மாணவர்களுக்கு உரிமை இருக்கிறது:

இதன் பிறகு விஜயன் வாதிடுகையில், மாணவர்களைப் பொறுத்தவரை தங்கள் சட்டப்படியான கடமையை நிறைவேற்றிவிட்டனர். தொழிற் கல்வியில் இடம் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அரசு கூறிய படி தகுதி மதிப்பெண்கள் மற்றும்நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர். முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு முதல் அதை அமல்படுத்தலாம். இம்ப்ரூவ்மென்ட் தேர்வு செல்லும் என்று ஏற்கெனவே இதே உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கூறுகையில், உங்கள் வாதத்தில் ஆரம்ப முகாந்திரம் உள்ளது. இருந்தாலும் எதிர்தரப்பில் என்ன பதில்அளிக்கின்றனர் என்பதை பார்க்கலாம் என்றார்.

பின்னர் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதிடுகையில், கிராமப்புற மாணவர்களுக்கும் சம வாய்ப்புஅளிக்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலை. கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி வசதிகள் கிடைப்பதில்லை.மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த அளவில் தான் இடங்கள் கிடைத்துள்ளது. இம்ப்ரூவ்மென்ட்மாணவர்களுக்கு தொழிற் படிப்புகளில் அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லை. ஒரே ஒரு மாணவன் தான் தற்போதுபொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளான். இது தான் சி.பி.எஸ்.இ., மாணவர்களின் நிலை. தற்போது நீதிமன்றத்தில்மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் அனைவரும் மாநில கல்வி முறையை பின்பற்றியவர்களே என்றார்.

மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்:

அப்போது குறுக்கிட்ட கட்ஜூ, கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை தர வேண்டும் என்றால் இந்திய மருத்துவக்கவுன்சில் அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றை அணுகி உரிய மாற்று ஏற்பாடுகளைஅரசு செய்திருக்க வே ண்டும்.

அதற்குப் பதிலாக நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகளை நடத்தி விட்டு திடீரென ரத்துசெய்துள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு முறை இருக்கும் போது எப்படி அவர்களை வேறுபடுத்தமுடியும்? அது அரசியலமைப்பு சாசன விதி 14 ஐ மீறுவதாக இருக்கும். ஏற்கெனவே பின்பற்றிய நடைமுறையை தொடருங்கள்.ஓராண்டு காலம் இருக்கிறது. நிபுணர்களை ஆலோசித்து புதிய திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். கிராமப்புற மாணவர்கள்பாதிக்கக் கூடாது என்கிற அரசின் நிலையை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

இதன் பிறகு பி.பி. ராவ் கூறுகையில், ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகள் என்பது ஒரு பரிந்துரை தான். பிளஸ் 2 தேர்வுசட்டப்பூர்வமானது. நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பது ஒரு ஆலோசனை தான். மாணவர்களின் மெரிட் நிலையைஅறிய நுழைவுத் தேர்வு ஒரு வழி. முன்பு பிளஸ் 2 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு பின்பற்றப்பட்டது. அதன்பிறகு நேர்முகத்தேர்வுக்குப் பதிலாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கூறுகையில், வெவ்வேறு தேர்வு முறை இருப்பதால் அதில் வித்தியாசம் இருக்கும்.அரசாணையை ரத்து செய்யலாம் என கருதுகிறோம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைநடக்கட்டும். கிராமப்புற மாணவர்களை மனதில் கொண்டு புதிய திட்டம் வகுக்க வேண்டும். உங்களுக்கு ஓராண்டு காலம்உள்ளது. விதிமுறைகளை புறக்கணித்து விட முடியாது. பிளஸ் 2 தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு முறை இருப்பதால்நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு:

இதன் பிறகு விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது.அப்போது வழக்கறிஞர்களின் வாதத்திற்கு இடையே குறுக்கிட்ட நீதிபதி கட்ஜூ, சட்டப்படி நடத்தப்பட்டநுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்துள்ளது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. ஒரு அரசாணைமூலம் இப்படி திடீரென ரத்து செய்துள்ளதை தவிர்த்திருக்கலாம்.

ஒரு தரப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அரசு கருதினால் மத்திய அரசை அணுகி முறைப்படி மாற்றுஏற்பாடுகளை செய்திருக்கலாம். தற்போதைய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கநிறைய இடம் உள்ளது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+