திருக்குறுங்குடி: ஜெயேந்திரர் மீது வழக்கு தொடர இடைக்கால தடை
சென்னை:
திருக்குறுங்குடி கோவில் சிவன் சன்னதி இடிப்பு விவாகரத்தில் ஜெயேந்திரர், முதல்வர் ஜெயலலிதாவின்ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் உட்பட 5 பேர் மீது வழக்கு தொடர உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஸ்ரீரங்கம் திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை என்றஅமைப்பின் செயலாளர் கிருஷ்ணமாச்சாரி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அதன் பேரில் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமாச்சாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன், கிருஷ்ணமாச்சாரியின் புகாரின் பேரில், ஜெயேந்திரர், ஜெயலலிதாவின்ஆஸ்தான ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர்,
பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசன், நாங்குனேரி ஜீயர் மட உறுப்பினர் ராமானுஜா, நாங்குனேரிவானுமாமலை மட உறுப்பினர் கல்யாண் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. ஜெயேந்திரர் தவிர உண்ணிகிருஷ்ண பணிக்கர் உள்ளிட்ட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ்ூ, நீதிபதி இப்ராகிம்கலிபுல்லா முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயேந்திரர், உண்ணிகிருஷ்ணபணிக்கர் உட்பட 3 பேர் மீதும் வழக்கு தொடர இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரையோ அல்லது மாஜிஸ்திரேட்டையோ மனுதாரர்முதலில் அணுகியிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெவித்தனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
திருப்பதியில் ஜெயேந்திரர்:
இதற்கிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயேந்திரர் நேற்று திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றார். அவருக்கு திருப்பதி கோவில் நிர்வாகம்சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இன்று காலை, கோவிலில் நடைபெற்ற வாராந்திர அபிஷேக பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான பிறகு தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்வது இதுவே செல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தான் கடைசியாக ஜெயேந்திரர் திருப்பதிக்கு வந்தார். அப்போது அவர் திருப்பதி கோவிலுக்கு ரூ. 1.50 கோடிமதிப்பிலான வைரக்கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications