சுனாமி நிவாரணம்: இலங்கை அரசுடன் புலிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சுனாமி நிவாரணப்பணிகளுக்காக சர்வதேச நாடுகள் வழங்கிய தொகையை பகிர்ந்து கொள்வது தொடர்பானஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் நேற்று கையெழுத்திட்டன.

இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பல சர்வதேச நாடுகள்வழங்கிய ரூ. 13,000 கோடி தொகையை பகிர்ந்து கொள்வதில் இலங்கை அரசுக்கும், விடுதைலைப் புலிகளுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நார்வே வெளியுறவு துணை அமைச்சர் விடார்ஹெல்ஜெசன் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை வந்தார். அவர் முதலில் அதிபர் சந்திரிகாவை சந்தித்துப்பேசினார்.

இதன் பிறகு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனையும் பிறதலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் சந்திரிகா அளித்த வாக்குறுதிகளையும்,யோசனைகளையும் நார்வே அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்செல்வனிடம் விளக்கினார்.

ஆனால், நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வதில் தெளிவான திட்டம் ஏதும் இலங்கை அரசிடம்இருந்து கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் அப்போது இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பில்கூறப்பட்டது.

விடுதலைப் புலிகள் கையெழுத்து:

இந் நிலையில் சுனாமி நிவாரண ஒப்பந்தத்தில் நேற்று இலங்கை அரசு கையெழுத்திட்டது. இது குறித்து இலங்கைஅமைச்சர் மைத்ரிபாலா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் இணைந்து னாமி நிவாரணப் பணிகளில்ஈடுபடுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.

இலங்கை அரசின் மறுவாழ்வுத் துறை அமைச்சர் ஜெயசிங்கே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதற்கான ஆவணங்களுடன் நார்வே தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகளை சந்திக்க கிளிநொச்சி சென்றுள்ளனர்.

அவர்கள் இதில் கையெழுத்திட்ட உடன் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

கிளிநொச்சி சென்ற நார்வே தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகளை சந்தித்து பேசினர். பின் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட புலிகள் சம்மதித்தனர். விடுதலைப் புலிகளின் சார்பில் முக்கிய நிர்வாகி சண்முகலிங்கம் ரஞ்சன்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தலா 3 ஒப்பந்த நகல்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன. ஒரு நகல் அரசு வசமும், அடுத்த நகல் புலிகள்வசமும், 3வது நகல் நார்வே வசமும் இருக்கும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, சுனாமி நிவாரணத்துக்காக கிடைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் வெளிநாட்டு நிதியைவிடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பகிர்ந்து கொள்ளும். இதற்காக மூன்று அடுக்குகளாக ஒரு கூட்டமைப்புஉருவாக்கப்படும். மூவர் குழு இதற்கு தலைமை வகிக்கும்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தால் கடந்த 2 வருடங்களாகஅமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீங்க வழி ஏற்பட்டுள்ளது என்று இலங்கைநிதியமைச்சர் சரத் அமுநுகம கொழும்பில் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+