மழை பெய்தால் காவிரியில் தண்ணீர்: தரம்சிங்
தஞ்சாவூர்:
கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தால் காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என்றுதஞ்சாவூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்துவதற்காக, கர்நாடக முதல்வர் தரம்சிங் நேற்று காலை தஞ்சைக்குதனி விமானம் மூலம் வந்தார். அவரை தஞ்சை மாவட்ட கலெக்டர் வீரசண்முகமணி, எஸ்.பி அசோக்குமார் தாஸ் ஆகியோர்வரவேற்றனர்.
தரம்சிங்குடன், அவரது மனைவி பிரபாவதி, மகன்கள் விஜய்சிங், அஜய்சிங், மகள் பிரியதர்ஷினி, மருமகன் சந்திரசிங்,அண்ணி ஜென்னுபாய், பேரக் குழந்தைகள் அனுஷியா, அருணே ஆகியோரும் வந்திருந்தனர்.
தஞ்சாவூர் விருந்தினர் மாளிகையில் தரம் சிங் நிருபர்களிடம் கூறுகையில், எனது குடும்பத்துடன் சுவாமி தரிசனத்துக்காகவந்துள்ளேன். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்றார். காவிரி பிரச்னை குறித்து கேட்டபோது அவர் கருத்து ஏதும்சொல்லவில்லை.
பின் அவர் குடும்பத்தினருடன் காரில் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில் சென்றார். திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் பூர்ணகும்ப மரியாதையுடன் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.
அங்கு தரம்சிங் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த முறை கர்நாடகத்தில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் திறந்துவிட்டோம். தற்போது கபினி உட்பட எந்த அணையிலும் நீர் இல்லை. மழை தாராளமாக பெய்தால் தண்ணீர் விடுவோம்என்றார்.
பின்னர் அவர் சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு நிருபர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றம்ஆணையிட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவது எங்கள் கடமையாகும். தற்போது நடந்து முடிந்த காவிரி கண் காணிப்புகுழு கூட்டத்தில் கூட முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, மணிசங்கர் அய்யர், தமிழகமுதல்வர் போன்றோர் தண்ணீர் திறக்கக் கோரி கடிதம் அனுப்பி உள்ளனர் என்றார்.
பின் அங்கிருந்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதன்
பின்னர் நேற்று மதியம் 2.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, தஞ்சாவூர் வந்து விமானம் மூலம் பெங்களூர் திரும்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications