காவிரி: ஜூலை 4ல் மதிமுக போராட்டம்
சென்னை:
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடக் கோரி ஜூலை 4ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தவிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் மதிமுக ஆட்சி மன்றக் குழு மற்றும் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர்வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் மதிப்பதே இல்லை.தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை அது தர மறுத்து வருகிறது.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்கி இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவேநதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
தற்போது காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைகருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி
ஜூலை 4ம் தேதி காவிரிப் பாசனப்பகுதி மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தஞ்சையில் எனது தலைமையிலும், திருச்சியில் எல்.கணேசன் தலைமையிலும், திருவாரூரில் கண்ணப்பன் தலைமையிலும்,நாகையில் செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறோம். எனவே மத்திய அமைச்சரவையில்விரைவில் செய்யப்படவுள்ள மாற்றத்தின்போது மதிமுக அதில் இடம் பெறாது.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிஅமோக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார்.
கருணாநிதிக்கும் எனக்கும் இடையே எப்போதும் நெருக்கம் அதிகம். இடையில் இருந்த பனித்திரை விலகி விட்டது. இப்போதுஇருவரும் இன்னும் நெருக்கமாக உள்ளோம்.
அதற்காக மதிமுகவை திமுகவுடன் இணைப்பது என்ற பேச்சோ, சிந்தனையோ எழவில்லை. மதிமுக தனது தனித்தன்மையைவிட்டுக் கொடுக்காமல் செயல்படும் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications