கருணாநிதி சென்னை திரும்பினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு வார ஓய்வுக்குப் பின் திமுக தலைவர் கருணாநிதி இன்று பெங்களூரிலிருந்து சென்னை திரும்பினார்.
கடந்த 20ம் தேதி கருணாநிதி, மனைவி தயாளு அம்மாளுடன் பெங்களூர் சென்றார். பெங்களூரில் மகள் செல்வியின் வீட்டில்தங்கி அவர் ஒரு வாரம் ஓய்வு எடுத்தார். அப்போது ராம நாராயணனின் செல்லக்கிளி என்ற படத்திற்கு வசனம் எழுதினார்.
ஒரு வார ஓய்வுக்குப் பின் கருணாநிதி விமானம் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர்நிருபர்களிடம் கூறுகையில், மன்மோகன் சிங் அரசு குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக நான் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தந்தி அடித்துள்ளேன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. ஆனால் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனைவரியை குறைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications