பெட்ரோல் விலை உயர்வு: 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 2ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படுகிறது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ்தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு தொடர்ந்து 4 முறை பெட்ரோல், டீசல் விலையை அநியாயமாக உயர்த்தியதின்மூலம் தான் ஒரு மக்கள் விரோத அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அவர்கள் மீது மேலும் சுமையை ஏற்றும் வகையில், தற்போது 4வது முறையாகபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
இந்த விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வெகுவாக உயரச் செய்து அடித்தள, நடுத்தர மக்களைகடுமையாக பாதிக்கும். ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டுள்ள அதிமுக, இந்த விலை உயர்வைஎதிர்த்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா,
கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும், அந்தமானிலும் மாவட்டத் தலைநகரங்களிலுள்ள வங்கிகள், அஞ்சல்அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் ஆகிய மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற ஜூலை 2ம் தேதி சனிக்கிழமைகாலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications