பெட்ரோல் விலை உயர்வு: தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50ம்,டீசல் லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் இடது சாரிக்கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந் நிலையில், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நாடு முழுவதும்இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்தன.
இதன்படி, இன்று நாடெங்கும் உள்ள சுமார் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. கனரக லாரிகள், மணல் லாரிகள், சரக்கு லாரிகள்,காய்கறி லாரிகள், டேங்கர் லாரிகள் ஆகியவையும் நிறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் ஆட்டோக்கள், வேன்கள்மற்றும் சுற்றுலா வாகனங்களும் கலந்து கொண்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் இன்று லாரிகள் ஓடவில்லை. பால் மற்றும், தண்ணீர் லாரி உட்பட அத்தியாவசிய லாரிகள் தவிர அனைத்துலாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் 40,000 லாரிகள் கலந்து கொண்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்தெரிவித்தனர்.
சென்னையிலும் இன்று லாரிகள் ஓடவில்லை. இதனால் சென்னைக்கு வரும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்பல இடங்களில் தேங்கியுள்ளன. இன்று நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அதற்குப் பிறகே சரக்குள் கொண்டுசெல்லப்படும்.
லாரிகள் தவிர தமிழ்நாட்டில் வேன்கள், டாக்ஸி மற்றும் ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications