கண்ணப்பனைக் காப்பாற்ற வந்த 3 ரூபாய்!
சென்னை:
முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துசேர்த்ததாக தனி நீதிமன்றத்தில் கண்ணப்பன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அடுத்த கட்ட விசாரணை, வெறும் 3 ரூபாய்காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், மக்கள் தமிழ் தேச கட்சியின் தலைவருமான கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னைதனி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கண்ணப்பன் தவிர 21 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11 கோடிய 10 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது புகார்கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள், ரூ.1லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில்போலீஸார் ஒப்படைத்திருந்தனர்.
இந்த வழக்கில் தனி நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சம் ரொக்கப் பணத்தில் 3 ஒரு ரூபாய் தாள்களைக் காணவில்லைஎன்பதை அறிந்து திடுக்கிட்டனர். ரூ. 1லட்சம் ரூபாய் நோட்டுக்களின் அனைத்து எண்களும் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே காணாமல் போன ஒரு ரூபாய்த் தாள்களுக்குப் பதில் வேறு நோட்டுக்களையும் கொடுக்க முடியாது. இதனால் காணாமல்போய் விட்ட 3 ஒரு ரூபாய்த் தாள்களையும் தேடும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தால் தான் கண்ணப்பன் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை நகலைத் தர முடியும்,அதுதொடர்பாக சம்மன் அனுப்ப முடியும். பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் 3ரூபாய் காணாமல் போனதால் வழக்கு விசாரணை ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications