ஜெ. வழக்கு: பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்றுதொடங்குகிறது.
சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஓட்டல் வழக்கை இணைக்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுமீதான விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்தது.
இந் நிலையில் இரு வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்கும் படி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கை சேர்த்து ஒரேவழக்காக விசாரிக்க நீதிபதி பச்சாப்பூரே கடந்த 27ம் தேதி உத்தரவிட்டார்.
லண்டன் ஹோட்டல் வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முதல் நான்கு எதிரிகளாகஉள்ளனர். இந்த வழக்கில் 2வது எதிரியாக இருந்து வந்த தினகரன் எம்.பி. முதல் வழக்கான சொத்து குவிப்பு வழக்கின் 5வதுஎதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்குடன், லண்டன் ஹோட்டல் வழக்கு இணைக்கப்பட்டிருப்பதால், சொத்து குவிப்பு வழக்கு முதலில்இருந்து மீண்டும் விசாரிக்கப்பட இருக்கிறது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள சாட்சிகள், திரும்பஅழைக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட உள்ளனர்.
ஜெயலலிதா உட்பட வழக்கின் எதிரிகள் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என தெரிகிறது. மேலும்,சொத்து குவிப்பு வழக்கில் 5வது எதிரியாக தினகரன் சேர்க்கப்பட்டிருப்பதால், அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
தனி நீதிமன்றத்தால், இணைக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை அதிகாரபூர்வமாக இன்று தொடங்குகிறது. இன்றையவிசாரணையின் போது, வழக்கு விசாரணையை எந்த கட்டத்தில் இருந்து தொடங்குவது, தினகரன் மீது கூடுதல் குற்றச்சாட்டுபதிவு செய்வது,
கூடுதல் விசாரணைக்காக சாட்சிகளை திரும்ப அழைப்பது, ஜெயலலிதா உட்பட வழக்கின் எதிரிகளைக் கோர்ட்டுக்குஅழைப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கின்விசாரணை இன்று முதல் தினமும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications