நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல்
டெல்லி:
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என்றுஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாதெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, வழக்கறிஞர் அய்யம் பெருமாள் ஆகிய இருவரும்டெல்லி சென்று அங்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின்வழக்கறிஞர் அய்யன் பெருமாள் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதிஎடுக்கப்பட்ட நடவடிக்கை மதிக்கப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தமிழக அரசின் ஆணையை அமல்படுத்த உச்சநீதிமன்றம்இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
கல்வியாண்டின் தொடக்கமாக இருப்பதால் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்கவேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது.
கோடை விடுமுறை முடிந்ததும் ஜூலை 4ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications