44 வயது பேராசியருடன் வாழ 19 வயது மாணவிக்கு கோர்ட் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

44 வயதான கல்லூரிப் பேராசியரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்ட 19 வயதுமாணவி, அவரது விருப்பப்படி காதல் கணவருடன் வாழ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. 19 வயதான பூர்ணிமா, சேலத்தில் உள்ள நேஷனல் கம்ப்யூட்டர்அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார்.

பூர்ணிமாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தங்காபுதூரைச் சேர்ந்த பழனியப்பன் என்ற கல்லூரி பேராசியருக்கும் காதல் ஏற்பட்டது.பழனியப்பனுக்கு 44 வயது. ஏற்கனவே சகுந்தலா என்ற பெண்ணுடன் கல்யாணமாகி அவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

இருப்பினும் சகுந்தலாவின் வீட்டார் பழனியப்பன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடர்ந்ததால், கணவன், மனைவிஇருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில், பழனியப்பனின் வயது, அவரது குடும்பப் பின்னணி குறித்து கவலைப்படாமல் அவரை தொடர்ந்து காதலித்துவந்த பூர்ணிமா, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி பழனியப்பனுடன் சென்றார்.

இதையடுத்து பூர்ணிமாவின் தந்தை அர்ஜூன் லால்சிங், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், தனது மகளை பழனியப்பன் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாகவும், பிப்ரவரி 17ம்தேதி முதல் தனது மகளைக் காணவில்லை என்றும், அவரை பழனியப்பனிடமிருந்து மீட்டுக் கொடுக்குமாறும் கோயிருந்தார்.

இதுதொடர்பாக இருவரையும் கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார்தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பூர்ணிமாவைக் கண்டுபிடித்தனர்.

அவர் நேற்று (புதன்கிழமை) நீதிபதிகள் சதாசிவம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பூர்ணிமா கூறுகையில், நான் விரும்பித் தான் பழனியப்பனுடன் சேர்ந்துவாழ்கிறேன். நாங்கள் இருவரும் பிப்ரவரி 18ம் தேதி மாணியம்பாடி என்ற ஊரில் உள்ள கோவிலில் வைத்துக் கல்யாணம்செய்து கொண்டோம்.

ஆனால் கல்யாணத்தை முறைப்படி இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை. எனக்கு பழனியப்பனை சிறு வயதிலிருந்தேதெரியும், அதாவது நான் 9வது வகுப்பு படித்து வந்த நாள் முதலே தெரியும். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததால் தான்காதலித்தேன்.

பழனியப்பனின் குடும்பப் பின்னணி, அவரது வயது குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் மீது எனக்கு தூய காதல்ஏற்பட்டதால் இவை எல்லாம்எனது கண்ணில் படவில்லை. நான் அவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். என்னையாரும் மிரட்டவில்லை, கடத்தவில்லை.

பழனியப்பனுடன் வாழ்ந்தால் தான் எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். எனவே என்னை அவருடன் சேர்ந்து வாழநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார் பூர்ணிமா.

இதையடுத்து பழனியப்பனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரும், பூர்ணிமா தனது மனைவி என்றும் அவருடன்சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். பூர்ணிமாவின் வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதிகள், இதற்கு மேல்இந்த வழக்கில் எதுவும் இல்லை.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணே மிகத் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டார். கோவிலில் கல்யாணம் செய்துகொண்டதற்கான ரசீதையும் காட்டியுள்ளார். இருவரும் மனமொத்துத் தான் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. பெண்கடத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மாணவி பூர்ணிமா, பழனியப்பனுடன் சேர்ந்து வாழலாம் என்றுநீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பூர்ணிமாவும், பழனியப்பனும் சந்தோஷமாக நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+