சுனாமி: நாகையில் அப்துல் கலாம்
நாகப்பட்டினம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று காலை நாகப்பட்டினம் வந்தார். அங்கு அவர் சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளையும், மக்களையும் சந்திக்கிறார்.
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அப்துல் கலாம் தனி விமானம் மூலம்புதன்கிழமை இரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் மேயர் சாருபாலா, கலெக்டர் நந்தகிஷோர், டி.ஆர்.ஓ. செந்தில்குமார்,மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., ஜார்ஜ்,
மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) சுனில்குமார் சிங் உட்பட முக்கிய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின்னர் கலாம், கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு தங்கினார். இன்று காலை 8.30 மணிக்குஹெலிகாப்டர் மூலம் நாகை சென்றார்.
அங்கு அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர்அங்கிருந்து ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குக் கலாம் சென்றார். சுனாமி நிவாரணப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்துகலாமுக்கு ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
இதையடுத்து கலாம் வேளாங்கண்ணி செல்கிறார். அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் பார்க்கிறார்.அதன் பின்னர் வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்கிறார். பின்னர் வேளாங்கண்ணி பேராலயம்அருகே தங்கியுள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட 100 விவசாயிகளை சந்தித்துப் பேசுகிறார் கலாம்.
பின்னர் கீச்சாங்குப்பம் பகுதிக்கு செல்கிறார். அங்கு நடந்து வரும் நிவாரணப் பணிகள், மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடும்கலாம் மீனவர்களுடனும் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அக்கரைப்பேட்டை கிராமத்திற்கும் கலாம் செல்கிறார்.
அக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களை சந்திக்கும் கலாம், பள்ளி மாணவர்களையும் சந்திக்கிறார். மதியஉணவுக்காக பணங்குடியில் தங்கும் கலாம், அதன் பின்னர் நாகை தேசிய மேல் நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார்.
பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கடம்பாடி செல்லும் கலாம், அங்குள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கானகாப்பகத்திற்கு சென்று குழந்தைகளை சந்திக்கிறார். இவற்றை முடித்துக் கொண்டு அவர் நாகூர் செல்கிறார்.
அங்குள்ள சில்லடி தர்காவுக்கு சென்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் நாகூர் தர்காவில்வழிபாடு நடத்துகிறார். இப்பயணத்தை முடித்துக் கொண்டு இரவு நாகையில் தங்கும் கலாம், வெள்ளிக்கிழமை காலைதிருச்சிக்கு திரும்பி அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications