காளிமுத்து கட்டிய "புத்தக வட்டி!
கோட்டயம்:
கோட்டயம் தமிழ் மன்றத்திற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் அனுப்பிய 300 புத்தகங்கள் போய் சேராததால், வட்டியும்முதலுமாக 1000 புத்தகங்களை வழங்குவதாக சபாநாயகர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக காளிமுத்து பதவி வகித்தார். அப்போதுகோட்டயம் தமிழ் மன்றத்திற்கு அவர் சென்றார். அப்போது தமிழ் மன்றத்திற்கு நன்கொடையாக 500 புத்தகங்களைவழங்குவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் அவர் சென்னை திரும்பினார். 22 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது தனது மனைவி மனோகரி, மகள்கள்அமுதா, அருள்மொழி, கயல்விழி ஆகியோருடன் கோட்டயம் சென்ற காளிமுத்து தமிழ் மன்றத்திற்கும் விசிட் அடித்தார்.
அப்போது, தான் அனுப்பிய 500 புத்தகங்கள் வந்து சேர்ந்ததா என்று கேட்டார். ஆனால் 200 புத்தகங்கள் தான் வந்ததாகவும்,300 புத்தகங்கள் வரவில்லை என்றும் தமிழ் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து,அப்படியா என்று கூறி விட்டு, சரி, 300 புத்தகங்களுக்கு வட்டியாக 1000 புத்தகங்களை அனுப்புவதாக கூறினார்.
மேலும், சென்னையில் உள்ள தனது உதவியாளருக்கு போன் செய்து தமிழ் தொடர்பான 1000 புத்தகங்களை உடனடியாகஅனுப்புமாறு கூறி என்னென்ன புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், தான் 1983ம் ஆண்டு வந்தபோது தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வள்ளுவர், பாரதியார் உருவப் படங்கள் தமிழ்மன்றத்தின் சுவர்களை அலங்கரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். 1000 புத்தகங்களும் வந்து சேர்ந்ததும் எனக்குத் தகவல்கொடுங்கள் என்று தமிழ் மன்ற நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார் காளிமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications