3 ரூபாய் கிடைத்தது! கண்ணப்பனுக்கு சம்மன்!!
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் காணாமல் போன 3 ரூபாய்கிடைத்து விட்டதால், அவருக்கு சம்மன் அனுப்ப சென்னை தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். தற்போது இவர் திமுக முகாமில் உள்ளார்.மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் கண்ணப்பனின் இப்போதைய பெயர் ராஜகண்ணப்பன் ஆகும்.
கண்ணப்பன் அவரது மனைவி நளாயினி உள்ளிட்ட 20 பேர் மீது சென்னை தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குஉள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கண்ணப்பனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1லட்சம் ரொக்கப் பணம் பிறஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் கண்ணப்பன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு ஆவணங்கள், கைப்பற்றப்பட்டபொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது கண்ணப்பனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து 3ரூபாயை காணவில்லை.
இதனால் கண்ணப்பன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரூபாய் நோட்டுக்களைத்தேடும் பணியில் கோர்ட் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தற்போது காணாமல் போன ரூபாய் நோட்டுக்களைக் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து வருகிற ஜூலை 29ம் தேதிகண்ணப்பன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மதிவாணன் உத்தரவிட்டு சம்மன் அனுப்பஆணையிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications