சேது சமுத்திரம்: தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா ஜூலை 2ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபுணர் குழு தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு, திமுகதலைவர் கருணாநிதியின் நெருக்கடி காரணமாக இந்த விழாவை அவசர கோலத்தில் நடத்துவதால் இந்த விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிப் பெர்னாண்டோ என்பவர்நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், இந்தத் திட்டத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அத்தோடு மீன் பிடி தொழில் பாதிப்பதோடு ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படும்.
இத்திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தமிழக முதல்வரும் கவலை தெரிவித்துள்ளார். மேலும்,இத்திட்டம் தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் மத்திய அரசு சரிவர கருத்து கேட்கவில்லை.
எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளதடையில்லாச் சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த மனு நீதிபதிகள் தினகர், சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைதள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications