கபினியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
சேலம்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7000 கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின்முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹோரங்கி ஆகியவற்றுக்கு நீர் வரத்துஅபரிமிதமாக உள்ளது.
கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தக் கொள்ளளவு 65 அடி கொண்ட கபினி அணையில்தற்போது 61 அடி நீர் உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் கபினி நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது.
இந் நிலையில் கபினி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக உள்ளது. இதனால் அணையின்பாதுகாப்பு கருதி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று வரை வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் இது வினாடிக்கு 7042கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது.இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 110 அடியாகும். அணையில் தற்போது 93.03 அடி நீர் இருப்புஉள்ளது.
கிருஷ்ணராஜ சாகருக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணை நிரம்பினால் அதிலிருந்தும் உபரி நீர்திறந்து விடப்படும் வாய்ப்பு உள்ளது.
கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் வெள்ளிக்கிழமை வாக்கில் தான் மேட்டூர் அணையைஅடையும் என்று தெரிகிறது. மேட்டூர் அணையில் தற்போது 51.95 அடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 139 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்துவினாடிக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கபினி நீரும் கூடவே, கிருஷ்ணராஜசாகர் நீரும் வந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு கணிசமான நீர் வரத்துகிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications