கொலை வழக்கில் 6 நாளில் தீர்ப்பு
சென்னை:
கொலை நடந்து ஆறே நாளில் தீர்ப்பு வழங்கி செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
சமீப காலமாக சென்னை நீதிமன்றங்கள் விரைவாக தீர்ப்புகளைக் கூறி சாதனை படைத்து வருகின்றன. ஒரு மாதத்தில், 20நாளில், 14 நாளில் என தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில், கொலை நடந்து 6நாட்களிலேயே ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லத்திகா. ஜூன் 29ம் தேதி லத்திகா மீதுமண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் ராஜேந்திரன். இதில் தீயில் கருகி லத்திகா இறந்து போனார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜேந்திரனை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்திற்கு வழக்குமாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்து நேற்றுதீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளி ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 500 அபராதம் (கட்டாவிட்டால் மேலும் 6 மாதம்சிறைத் தண்டனை) விதித்து நீதிபதி ஜெயரட்சகன் தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications