கூட்டணி ஆட்சிதான் பெஸ்ட்: கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு நல்லது என்று புதிய தமிழகம்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நல்ல கூட்டணி அமைந்தால் அதில் நாங்கள் சேரத் தயங்க மாட்டோம்.ஆனால் கூட்டணியில் சேருவதற்காக யார் பின்னாலும் அலைய மாட்டோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த தேர்தலுக்குப் பிறகு அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் வகையிலான கூட்டணிஆட்சி அமைய வேண்டும். அது தான் தமிழகத்திற்கு நல்லது. இதன் மூலம் மட்டுமே தமிழகம் அனைத்துத் துறையிலும்தன்னிகரற்ற மாநிலமாக விளங்க முடியும்.
கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications