ராஜீவ் கொலை: 2 புலிகள் விடுதலையை எதிர்த்து சிபிஐ அப்பீல்
டெல்லி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த லிங்கம் மற்றும் வசந்தனை சென்னைஉயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இதைஎதிர்த்து 26 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில், முருகன், நளினி உள்ளிட்ட 4 பேருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நளினி கருணை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரதுதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் உள்ளிட்ட 3 பேரும் கருணை மனு தாக்கல் செய்தனர். அவைகுடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளன.
இந் நிலையில் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரிக்க பல்நோக்கு விசாரணை கமிட்டிஅமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அகதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த வசந்தன், லிங்கம் ஆகியோருக்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது.
இருப்பினும் இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்கள்ஆவர்.
இதையடுத்து இருவரது விடுதலையையும் எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications