சென்னை கோர்ட்டில் வழக்கறிஞர் தீக்குளித்தார்!
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நடந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தின் போது ஒருவழக்கறிஞர் தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
தமிழகத்திலும் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந் நிலையில் இன்று காலை எழும்பூர்குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர்திடீரென தீக்குளித்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக வழக்கறிஞர்கள் உடனடியாக தீயை அணைத்து பாலகிருஷ்ணனை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மதுரையில் வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களாக ஆர்ப்பாட்டத்திலும், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications