காவிரியில் தண்ணீர் விட தரம்சிங்குக்கு ஜெ. கடிதம்
சென்னை:
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப் படி கர்நாடகம் தண்ணீர்திறந்து விட வேண்டும் என அம்மாநில முதல்வர் தரம்சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
இதுதொடர்பாக தரம்சிங்குக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் உள்ள முக்கியமான நான்கு அணைகளில்ஜூலை 5ம் தேதி நிலவரப்படி 49.094 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப் படி இந்தக் கால கட்டத்திற்குள் மேட்டூர் அணைக்கு கர்நாடகம் 17.796 டிஎம்சிதண்ணீரை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமை வரை 2.974 டிஎம்சி தண்ணீர் மட்டுமே மேட்டூருக்கு வந்துள்ளது.இன்னும் 14.822 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும்.
தற்போது கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அணைகளுக்கும் சராசரியாக வினாடிக்கு 37,000கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. எனவே மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறக்கும் வகையில், உடனடியாக கர்நாடகஅரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications