தினகரன் விடுதலை: அமலாக்கப் பிரிவு அப்பீல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூன்று அன்னியச் செலாவணி வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கப் பிரிவு மேல் முறையீடு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் 2வது பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் தினகரன் மீது 5 அன்னியச் செலாவணி மீறல் வழக்குகளைமத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது. இதில் 3 வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி தினகரன் மனுசெய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், தினகரனை 3 வழக்குகளிலிருந்து விடுதலை செய்து கடந்த 1ம் தேதிஉத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மத்திய அமலாக்கப் பிரிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதை விசாரணைக்குஏற்ற நீதிபதி சி.நாகப்பன், தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications