கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:
தமிழக அரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருதுக்கு இந்த ஆண்டும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.
சாகச செயல் புரியும் பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தமிழக அரசு கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கிகெளரவிக்கிறது. ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவை அடங்கியது இந்த விருது.
கடந்த 2003ம் ஆண்டு, முதல் விருதை ரேஷ்மா சர்மா என்பவர் பெற்றார். 2004ம் ஆண்டுக்கான விருது கன்னியாகுமரிமாவட்டத்தைச் சேர்ந்த அமல மேரி என்பவர் பெற்றார்.
மார்த்தாண்டம் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டபோது, தனது சேலையை அவிழ்த்து கொடி போல அசைத்துஅனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் அமல மேரி. இதற்காகஅவருக்கு விருது வழங்கப்பட்டது.
இதேபோல இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு, சாகச செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, மாநில உற்துறைச் செயலாளருக்கு 044-25677128 என்றஎண்ணுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பலாம். விண்ணப்பத்துடன், தங்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய பயோடேட்டா,புகைப்படம் உள்ளிட்டவற்றையும் அனுப்ப வேண்டும்.
தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து, விருது பெறத் தகுதியான நபரை இறுதி செய்துமுதல்வர் ஜெயலலிதாவுக்குப் பரிந்துரை செய்யும்.
அதன் பிறகு கல்பனா சாவ்லா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை ஜெயலலிதா அறிவிப்பார். வருகிற ஆகஸ்ட் 15ம்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது விருது வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications