கும்பகோணம்: குற்றப்பத்திரிகை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் கடந்த ஆண்டு நடந்த கோர தீவிபத்து தொடர்பான வழக்கில் கும்பகோணம்நீதிமன்றத்தில் 1,500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 94 சிறார்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் புலவர் பழனிச்சாமி, செயலாளர் சரஸ்வதி, தலைமைஆசிரியை சாந்தலட்சுமி,

சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, அவரது உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். கல்வித் துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு முடியப் போகும் நிலையில் இவ்வழக்கில் கும்பகோணம் 2வது குற்றவியல்நடுவர் மன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. கல்யாணசுந்தரம் 1,500 பக்கங்கள் கொண்டகுற்றப் பத்திரிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் 1000 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 483 பேர்சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி பள்ளியின்ஊழியர் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறியுள்ளார் என்றார் கல்யாணசுந்தரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+