லண்டனில் தொடர் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி
லண்டன்:
லண்டனில் இன்று பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதையில் அடுத்தடுத்து நடந்து குண்டு வெடிப்புகளில் 2 பேர்பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 8 பணக்கார நாடுகள் கலந்து கொள்ளும் ஜி 8 நாடுகளின் மாநாடுஸ்காட்லாந்தில் இன்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நேற்று ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கும், போலீஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் லண்டனில் இன்று பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தது. இங்குள்ள அல்ட்கேட்,எட்க்வேர் ரோடு, கிங்க்ஸ் கிராஸ், ஓல்ட் ஸ்ட்ரீட் மற்றும் ரஸ்ஸல் ஸ்கொயர் உட்பட 6 இடங்களிலுள்ள சுரங்கப் பாதையில் இந்தகுண்டுகள் வெடித்தன.
ரஸ்ஸல் ஸ்கொயரில் ஒரு 2 அடுக்கு பஸ்ஸில் குண்டு வெடித்தது.மேலும் சில பஸ்களில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்பில் முதலில் கிடைத்த தகவலின் படி2 பேர் இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர்ரகாயமடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. குண்டு வெடிப்பு நடந்தஇடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குண்டு வெடிப்பிற்கு யார் காரணம் என்று தெரியவில்லை.
இதையடுத்து சிங்கப்பூரிலுள்ள லண்டன் நகர மேயர் இங்கிலாந்து திரும்பியுள்ளார். மத்திய லண்டன் பகுதியில் தற்போதுபஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் யாரும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் தங்களது பயணத்தை ஒத்தி வைக்கும் படியும் போலீஸார்கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்காட்லாந்து சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் லண்டன்திரும்புகிறார். ஆனாலும் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் கண்டனம்:
லண்டன் குண்டுவெடிப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள அவர் இதுகுறித்து கூறுகையில், இது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிரவாத செயல்களை உலக நாடுகள் இணைந்துஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இரு தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவும் இது போன்ற தீவிரவாதிகளின் தாக்குதலை சந்தித்தது என்றார்.
லண்டன் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications