மக்களை மதிக்காத ராமதாஸ்: நடிகர் ஆனந்தராஜ் ஆவேசம்
பாண்டிச்சேரி:
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். ஆனால் மக்களை அவர் மதிப்பதே இல்லை, அவர்களைஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை என்று நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர், படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும்ஆனந்தராஜ் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆனந்தராஜ்சென்னை திரும்பினார். இந் நிலையில் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆனந்தராஜ்.
அப்போது ராமதாஸ் குறித்தும், பாமக குறித்தும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். ஆனந்தராஜ் பேசுகையில், நானாகவலிய சென்று பாமகவை விமர்சிக்கவில்லை. செய்தியாளர்கள் கருத்து கேட்டார்கள், நான் கூறினேன்.
திரைப்படத் துறையை பாமக மட்டுமே தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. வேறு எந்த அரசியல் கட்சியும் இப்படிவிமர்சனம் செய்வதில்லை. அவர்கள் அவர்களது வேலையை மட்டும் பார்க்கிறார்கள். பாமக மட்டுமே தேவையில்லாதவேலையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பதில் கூறக் கூடாது என்று எப்படி பாமக கூற முடியும்? எனதுபேச்சுரிமையை பாமக நிராகரிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. இப்போது சிகரெட் பிடிப்பதற்கு எதிர்ப்புதெரிவிக்கிறார்கள்.
இதற்குத் தான் நான் திரைப்படம் பார்த்து ஒரு தனி மனிதன் கெடுவதில்லை என்றேன். தமிழகத்தில் பூரண மது விலக்குவேண்டும் என்று ராமதாஸ் கூறுகிறார். நாளை ஒருவேளை புதுவையில் இவர்கள் ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்கள்?
மதுவை நம்பித் தானே புதுவை மாநில அரசின் வருவாயே இருக்கிறது? நாங்கள் கை காட்டுபவர்கள் தான் முதல்வராகமுடியும் என்று கூறுகிறார் அன்புமணி. அப்படியானால் அவரது கட்சிக்குள்ளேயே ஒருவரை கை காட்டுவதுதானே?
இப்படியெல்லாம் நாம் பேசினால், இதையெல்லாம் நீங்கள் பேசக் கூடாது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு பொதுமக்களின்ஓட்டு மட்டும் தான் வேண்டும், மக்கள் தேவையில்லை, மக்களைப் பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை.
யாரும் அவர்களை கேள்வி கேட்கக் கூடாது. ஆரணியில் நான் 2 நாட்கள் தங்கியிருந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னைநிம்மதியாகத் தூங்க விடவில்லை. தக்க சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், காவல் துறையும் உதவி செய்தனர்.
அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் நான் ஒரு பெரிய கட்சியில் சேரவுள்ளேன்.சேர்ந்துபுதுவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்றார் ஆனந்தராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications