660 சாயப் பட்டறைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை:
ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் 660 சாயப் பட்டறைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக இந்த சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் சாயக் கழிவு நீர் ஒரத்துப்பாளையம் அணையில் கலந்துநிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. அணையில் தேங்கி நிற்கும் சாயக் கழிவு நீரை திறந்து விட்டால் கரூர் பகுதியில் விவசாயிகளுக்குபெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நொய்யல் ஆற்று நீரும் மாசுபட்டு விட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்றம், சாயப் பட்டறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுத்திகரிப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவைஅமைத்தது.
இந்தக் குழுவினர் சமீபத்தில் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து சுத்திகரிப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டுஆய்வு செய்தது.
இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் இக்குழு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் 660 சாயப் பட்டறைகளில் முறையான சுத்திகரிப்புவசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கற்பக விநாயகம், நிாகப்பன் ஆகியோர், உடனடியாக இந்த 660 சாயப்பட்டறைகளையும் மூட வேண்டும். இந்த பட்டறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படவேண்டும்.
இந்த உத்தரவுகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், மாவட்டஆட்சித் தலைவர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.
உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக ஈரோடு, திருப்பூர் பகுதி சாயப்பட்டறை அதிபர்கள்,தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications