ஜெ. உத்தரவு: நினைவிடமாகிறது தமிழ் தாத்தாவின் இல்லம்
சென்னை:
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், ஓலைச் சுவடிகளில் இருந்த பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் புறநானூ
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களையும் பதிப்பித்து வெளிக்கொணர்ந்து தமிழ்இலக்கியங்களைப் பாதுகாத்த பெருமைக்குரியவர் ஆவார்.
செல்லரித்தும், சேதமுற்றும், அழியும் நிலையில் இருந்த ஓலைச் சுவடித் தமிழை அச்சுத் தமிழாக்கியதோடு, புதிய நூல்களையும்படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்த தமிழ்த் தாத்த உ.வே.சாமிநாதய்யர்.
அவரது அரும் பணிகளைப் பாராட்டி அவரது பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரிவளாகத்தில் உள்ள அவரது திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை, தமிழ்நிாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்நடத்த முதல்வர் ஜெயலலிதா தனது முந்தையை ஆட்சிக் காலத்திலேயே, ஆணை பிறப்பித்தார்.
தமிழ்த் தாத்தாவின் 150வது பிறந்த நாளையொட்டி அன்னைத் தமிழ் மொழிக்கு தொண்டுள்ளத்தோடு அவர் ஆற்றியபணிகளைத் தமிழக மக்கள் என்றென்றும் நினைவு கொள்ளவும், இளைய தலைமுறையினருக்கு அவரது தமிழ்த் தொண்டினைஎடுத்துக் காட்டவும்,
உ.வே.சுவாமிநாதய்யர் வாழ்ந்த சரஸ்வதி இல்லத்தை நாட்டுடமையாக்கி, 11.50 லட்சம் செலவில் பழுது பார்த்து நினைவுஇல்லமாக போற்றிப் பாதுகாக்க முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஆணையிட்டார்.
மிகவும் பழமையான அந்த இல்லம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையால் மிகவும் பாதிப்படைந்ததால்,இதனை பழைய இல்லப் பாங்கு மாறாமல் புதுப் பொலிவுடன் உருவாக்கிப் போற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி,திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தை 1.37 லட்சம் செலவில்அரசு வாங்கிக் கொள்ளவும்,
மேற்கொண்டு ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு நினைவு இல்லம் அமைத்திடவும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications