புதிதாய் உருவாகும் தொகுதிகள்; ரத்தாகும் முக்கிய தொகுதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் சட்டசபைத் தொகுதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.

டெல்லியில் இன்று நடைபெறும் தொகுதி சீரமைப்பு ஆணையத்தின் இறுதிக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில்தொகுதி சீரமைப்புக்கு இறுதி வடிவம் கிடைக்கும் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபைத் தொகுதிகளை சீரமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி குல்தீப்சிங் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தான் நாடுமுழுவதும் சட்டசபைத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவற்றில் சில தொகுதிகள் மிகப் பெரியதாகவும், சிலதொகுதிகள் மிக சிறியதாகவும் உள்ளன. இவற்றை மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

வருவாய் கிராமம், தாலுகா, மாவட்ட அடிப்படையில் தொகுதிகள் சீரமைக்கப்படுகின்றன.

அதன்படி புதிதாக 11 தொகுதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 11 தொகுதிகள் நீக்கப்படுகின்றன என்பதை நாம்ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இந் நிலையில் தொகுதி சீரமைப்பு ஆணையத்தின் இறுதி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்றுநடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் போது தமிழக தொகுதி சீரமைப்பு குழுவினர் தங்களது கருத்துக்களைத்தெரிவிக்கிறார்கள்.

தற்போதுள்ள நிலையில் 18 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மாற்றங்கள் குறித்த விவரம்:

சென்னை:

சென்னையில் தற்போது 14 தொகுதிகள் உள்ளன. புதிதாக எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஆகிய தொகுதிகள்ஏற்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் 16 தொகுதிகளாக சென்னை தொகுதிகள் உயருகின்றன.

சென்னையைச் சுற்றிலும் (காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கீழ் இவை வருகின்றன) புதிதாகமதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவாலங்காடு, சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகள்உருவாக்கப்படுகின்றன.

வில்லிவாக்கம் நீக்கம்:

பெரிய தொகுதியாக உள்ள வில்லிவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் மதுரவாயல், ஆவடி,அம்பத்தூர், மாதவரம் ஆகிய தொகுதிகள் உருவாகின்றன.

தாம்பரம் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் உருவாகின்றன.ஆலந்தூர் தொகுதியிலிருந்து பிரித்து புதிதாக பல்லவாரம் தொகுதி உருவாக்கப்படுகிறது.

புதிய மாற்றம் மூலம் சென்னை நகரில் 16 தொகுதிகளும், சென்னையைச் சுற்றிலும் தாம்பரம், பல்லாவரம்,ஆலந்தூர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், மாதவரம் ஆகிய தொகுதிகளும் இருக்கும்.

மதுரையில்:

மற்றொரு முக்கிய மாவட்டமான மதுரையிலும் தொகுதி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை நகரில்உள்ள தொகுதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தொகுதி எண்ணிக்கையிலும் மாற்றம் இல்லை.

சேடப்பட்டி நீக்கம்:

ஆனால், மதுரைக்கு அருகே உள்ள சோழவந்தான் மற்றும் சேடப்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் நீக்கப்பட்டுஅதற்குப் பதில், மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய புதிய தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.

கோவை:

கோவையைப் பொருத்தவரை, கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பொங்கலூர் ஆகிய தொகுதிகள்நீக்கப்பட்டு சூலூர், பூனைமலை, கோவை தெற்கு, கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என்றுமாற்றியமைக்கப்படுகின்றன.

தொகுதிகளின் எண்ணிக்கை ஒன்று கூடி மொத்தம் 16 தொகுதிகள் இம்மாவட்டத்தில் இருக்கும்.

திருச்சி:

திருச்சி மாவட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொட்டியம், உப்பிலியாபுரம், திருச்சி-1, திருச்சி-2 ஆகியதொகுதிகள் நீக்கப்பட்டு திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய புதிய தொகுதிகளாகமாற்றப்படுகின்றன.

சேலம்:

சேலத்தைப் பொருத்தவரை தாரமங்கலம், ஏற்காடு, சேலம்-1, சேலம்-2, பனைமரத்துப்பட்டி, தலைவாசல் ஆகியதொகுதிகள் நீக்கப்பட்டு சுங்கப்பள்ளி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வாழப்பாடி ஆகியதொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.

நீக்கப்படும் முக்கிய தொகுதிகள்:

திருவல்லிக்கேணி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் வழக்கமாகப் போட்டியிடும் நெல்லை மாவட்டம்சேரன்மாதேவி, மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அதிமுகவுக்கு முக்கிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தேனி,

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி, கடலூர் மாவட்டம் மங்களூர் (திருமாவளவன் வழக்கமாகப் போட்டியிடும்தொகுதி), பொங்கலூர், அச்சரப்பாக்கம், வில்லிவாக்கம், பூந்தமல்லி ஆகியவை.

அதே போல திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வழக்கமாக போட்டியிடும் சென்னை அண்ணா நகர் தொகுதிஇரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது.

இந்தத் தொகுதிகள் சீரமைப்பு அதிமுகவுக்கு சாதகமாக செய்யப்பட்டுள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில்தீவிர குற்றம் சாட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+