இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க பழ. நெடுமாறன் முயற்சி
சென்னை:
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முனைவர்கள் க.ப.அறவாணன்,தமிழப்பன், ஆறு. அழகப்பன், மணவை முஸ்தபா, வீ.அரசு, மரு.செ.நெ.தெய்வநாயகம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரன், கவிஞர் காசி. ஆனந்தன், க.சச்சிதானந்தன், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கச் செயலாளர் முத்துராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.வெ.குழந்தைவேலு, புலவர் அறிவுடை நம்பி,
த.சுந்தரராசன், முகம் மாமணி, வ.வேம்பையன், நா.ப.இராமசாமி, புலவர் இறைக்குருவனார், இராசேந்திர சோழன், சூரியதீபன்,வீர. சந்தானம், தேனிசை. செல்லப்பா உட்பட ஏராளமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
1. இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக முதலில் தனித் தனிக் குழுக்கள்அமைப்பது என்றும் பிறகு இரண்டையும் இணைத்து ஒரே குழுவாக ஆக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
2. இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகளை இணைப்பதற்காகக் கீழ்க் கண்டவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழுஅமைக்கப்பட்டது.
இந்திய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு:
புலவர் க. சுப்ரமணியம், புலவர் அறிவுடை நம்பி ஆகியோர் அமைப்பாளர்களாகவும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகமுத்துராமன், த.சுந்தரராசன், முனைவர் ஆறு.அழகப்பன், முனைவர் மணவை.முஸ்தபா, நா.ப.இராமசாமி, கு.பச்சைமால்,வ.வேம்பையன், மரு.வெ.குழந்தைவேலு, நாக.இரகுபதி, தமித்தஇலட்சுமி தீனதயாளன், பார்த்தசாரதி ஆகியோரும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கண்ட குழுவில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் குழுவிற்கு வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு:
இலங்கைத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பெ.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். குழுவில் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் அமைப்பாளருக்குவழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications