கடற்கரையில் தலைமை செயலகம்; கை கழுவினார் ஜெயலலிதா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரை அருகே ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டும்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு விட்டது.

இத் தகவலை தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ராணி மேரிக் கல்லூரி உள்ள இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முன்பு திட்டமிட்டது. இதற்காக கல்லூரியைஇடித்து விடவும் முடிவு செய்தது. இதை எதிர்த்து ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாகஅந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தது தமிழக அரசு.

இதன் பிறகு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தார் முதல்வர் ஜெயலலிதா.இதுதொடர்பாக பூமி பூஜையும் போடப்பட்டது.

ஆனால் மத்திய சுற்றுச்சூழல்துறை மூலமாக அதற்கு ஆப்பு வைத்தது திமுக. மேலும் இத் திட்டத்தை எதிர்த்து வழக்குகளும்போடப்பட்டன. இதனால் அத் திட்டமும் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது.

இந் நிலையில் ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மெரீனா கடற்கரையில் தலைமைச் செயலகம் கட்டக் கூடாது. இதனால் மீனவர்களின் வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று கோரி பல்வேறு மீனவர் அமைப்புகள்,தன்னார்வ அமைப்புகள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மனு அனுப்பின.

மேலும் மீனவர்களுக்கு ஆதரவாக மனித உரிமைக்காக போராடி வரும் பிரபல சமூக சேவகி மேதா பட்கரும் களத்தில்குதித்தார். மீனவர் குடியிருப்புகளை பாதிக்கும் வகையில் கட்டடம் கட்டினால் அதை மக்களைத் திரட்டி தடுப்பேன் என்றுஅறிவித்து, முதல் கட்டமாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.

மேதா பட்கருடன் மோதினால் தேசிய அளவில் இது பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதால் அதிமுக அரசு ராணி மேரிக்கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்டும் தனது திட்டத்துக்கு மூடு விழா நடத்தியுள்ளது.

இந்த விவரம் மனித உரிமை ஆணையம் மூலமாக தெரியவந்துள்ளது. இத் திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் மனிதஉரிமை ஆணையம் கேட்ட விளக்கத்துக்கு அரசு பதில் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுமெரீனா கடற்கரை பகுதியில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட்டு விட்டது.

பிரச்சினை இல்லாத ஒரு இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்திருப்பதாக ஆணையம்கூறியுள்ளது.

மேதா பட்கர் மூலமாக ராணி மேரிக் கல்லூரி அரசின் புல்டோசர்களிடம் இருந்து தப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+