சேரன் எக்ஸ்பிரஸ்: தீக்குளித்தவர் சாயப்பட்டறை தொழிலாளி?
கோவை:
கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயலில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர் திருப்பூரைச் சேர்ந்த சாயப் பட்டறைத்தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இருகூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றபோது, ரயிலின்கடைசிப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தீயில் கருகின.
இந்த விபத்தில் கழிப்பறையில் இருந்த ஒருவர் உயிரோடு எரிந்து சாம்பலானார். அவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட காரணத்தால்தான் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்று விசாரைணயில் தெரிய வந்தது.
அவர் தீவிரவாதியா அல்லது வேறு ஏதாவது மன வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டவரா என்பது குறித்து பலகோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரிடமிருந்து 8 தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து அவரை அடையாளம் காண முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இறந்த நபர் திருப்பூரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கிடைத்துள்ளதடயங்களின் அடிப்படையில் அவர் திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலையில் பணியாற்றி வந்திருக்கக் கூடும் என்றும்சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் 600க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் அதிரடியாகமூடப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவராக இறந்த நபர் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
10 நாட்களில் விசாரணை அறிக்கை:
இந்த ரயில் தீ சம்பம் குறித்து தென்னக ரயில்வேயின் பாதுகாப்புப் பிரிவு ஆணையர் பிரணாப் குமார் சென் தனியாக விசாரணைநடத்தி வருகிறார்.
இன்று எரிந்து போன பெட்டிகளை பார்வையிட்ட அவர், இச் சம்பவம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்றும் 2 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கலாகும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications