பரபரப்பாய் ஒரு வருடத்தை பூர்த்தி செய்த மதுரை உயர்நீதிமன்றம் !
மதுரை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. ஜெயலட்சுமி, ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்குஉள்ளிட்ட பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளுடன் வரும் சனிக்கிழமை ஒரு வயதை பூர்த்தி செய்கிறது மதுரை கிளை.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சுழற்சி முறையில் 5 நீதிபதிகள் இயங்கி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்துஇவர்கள் மதுரை கிளைக்கு வந்து பணியாற்றுகின்றனர். இரண்டு டிவிஷன் பெஞ்ச்சுகள் மற்றும் ஒரு நீதிபதி என்ற முறையில்இந்த நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை சந்தித்த முக்கிய வழக்கு ஜெயலட்சுமி. தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியஅளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை அழகர்சாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தொடர்ந்தே ஜெயலட்சுமி-காக்கிகள் தொடர்பு விவகாரம் வெளியில் தெரியவந்தது.
அந்த வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் பத்திரிகைகளுக்கு செய்திப் பஞ்சமே ஏற்படாத வகையில் தினசரி ஒரு கதைவெளிவந்து பரபரப்பை கூட்டியது.
இதேபோல இன்னொரு பரபரப்பான வழக்கு குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு.
ஜெயலட்சுமி வழக்கில் ஒரு முடிவு தெரிந்து விட்டது. ஆனால் குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில்இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வரும் ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றும் கூட இன்னும் துப்பு துலங்காமல் வழக்குஇழுபறியாக உள்ளது.
கிளை செயல்படத் தொடங்கியபோது, நீதிபதிகளின் முதல் கண்டனத்திற்கு ஆளானவர்கள் வேறு யாருமல்ல, மதுரைவழக்கறிஞர்கள்தான்.
கீழ் நீதிமன்றத்தில் வாதாடுவது போல இங்கு வாதாடக் கூடாது. ஆங்கிலப் புலமையை அதிகரித்துக் கொள்ளுங்கள், முந்தையவழக்குகளை நன்கு ஆராய்ந்து உங்களது வாதப் புலமையை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்று ஆரம்பத்தில் நீதிபதிகள்,மதுரை வழக்கறிஞர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கினர்.
மதுரைஉயர்நீதிமன்றக் கிளை ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளதையடுத்து சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் பல்வேறுநிகழ்ச்சிகளுக்கு வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications