கர்நாடக அணைகளில் மத்திய அமைச்சர் ஆய்வு: ஜெ. தகவல்
டெல்லி:
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு நிலவரத்தை நேரில் அறிந்து ஆய்வு செய்ய மத்திய நீர்வளத்துறை அமைச்சர்பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தலைமையில் ஒரு குழுவை அனுப்ப பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 1991ம்ஆண்டு முதல் இதுவரை ஒரு முறை கூட நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதில்லைஎன்பதை பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.
22.7.2005 அன்று வரை தமிழகத்திற்கு, நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி 45 டிஎம்சி நீரை கர்நாடகம் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் 25.7.2005 அன்று வரை மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீரின் அளவு 21.48 டிஎம்சிமட்டுமே. விடுவிக்க வேண்டிய பற்றாக்குறை அளவு 24.32 டிஎம்சி. ஆகும்.
7.7.2005 நிலவரப்படி கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பு 70.55 டிஎம்சி ஆகும். மேலும் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளுக்கும் நல்ல நீர் வரத்து உள்ளது.
எனவே பற்றாக்குறையான 24.32 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட்டால் தமிழகத்தில் மேட்டூர் அணையைநாங்கள் திறந்து விட முடியும். எங்களது விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியும் என்று பிரதமரிடம்தெரிவித்தேன்.
மேலும், காவிரி நதி நீர் ஆணையத்தையும் உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்தேன். காவிரி நடுவர் மன்றஇடைக்காலத் தீர்ப்புப்படி, மாதாந்திர, வாராந்திர அடிப்படையில் கர்நாடக அரசு உடனடியாக தண்ணீர் திறந்து விடஆணையிட வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.
எனது கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட பிரதமர், கடந்த 4 ஆண்டுகளாக தமிழக காவிரி பாசன விவசாயிகள் குறுவைசாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை என்பதை தான் அறிவேன் என்றார். இரு தரப்பினருக்கும் ஏற்புடைய தீர்வுகாணப்படும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தலைமையில் ஒரு குழு கர்நாடகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு ஆய்வு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
காவிரிப் பிரச்சினை போன்ற முக்கிய, மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுகவினர் தனியாகவும், நான் தனியாகவும் சென்று பிரதமரை சந்தித்தது குறித்துசம்பந்தப்பட்ட கட்சியிடம் தான் கேட்க வேண்டும்.
அரசியல் கலக்க விரும்பவில்லை:
என்னைப் பொருத்தவரை தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டும். இதை அரசியலாக்க நான் ஒருபோதும் எண்ணியதில்லை.அரசியல் இதில் கலக்க நான் விரும்பியதில்லை. இந்தப் பிரச்சினையில் மற்ற கட்சிகள் என்னுடன் இணைந்து செயல்படமுன்வந்தால் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடச் செய்வதில் சோனியா காந்தியின் பங்குஅதிகம். அவர் அந்தக் கடமையிலிருந்து விலக மாட்டார், நிச்சயம் தனது கடமையைச் செய்வார் என நான் நம்புகிறேன்.கண்டிப்பாக அவர் செய்ய வேண்டும்.
தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் நலன் கருதித் தான் நான் புதியதிட்டங்களை அறிவிக்கிறேன். அதற்கும், சட்டசபைத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை நானும், அதிமுகவும் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்தக் கூட்டணியை யாராலும்உடைக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இப்போது அதுகுறித்துப்பேச விரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications