எகிப்து குண்டு வெடிப்பு: 6 பாகிஸ்தானியர்களின் படங்கள் வெளியீடு
ஷார்ம்-எல்-ஷேக் (எகிப்து):
எகிப்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 பேரின் படங்களை எகிப்து போலீஸார்வெளியிட்டுள்ளனர்.
எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் ஷார்ம்-எல்- ஷேக் சுற்றுலாத் தலத்தில் கடந்த சனிக்கிழமை தொடர் கார் குண்டுகள்வெடித்தன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 88 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கடும் கண்டனம் தெரிவித்தார். தீவிரவாதிகளின் இந்தமிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
இந் நிலையில் நேற்று எகிப்து நாட்டின் விசாரணை அதிகாரிகள் கூறுகையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாகபாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் தேடப்படுகின்றனர். ஷார்ம்- எல்- ஷேக் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த இவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பின் தலைமறைவாகி விட்டனர்.
பாஸ்போர்ட்டில் இருந்த அவர்களது போட்டோ நகல்கள் எல்லா சோதனை சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எந்த ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர் என்ற விவரத்தை இப்போது வெளியிட முடியாது என்றனர்.
இந் நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தானியர்களின் பெயர் மற்றும் படங்களை எகிப்து போலீஸார் இன்றுவெளியிட்டுள்ளனர். அவர்களது பெயர் முகமது அன்வர் (வயது 30), ரஷீத் அலி (வயது 26), முகமது அக்தர் (வயது 30),முகமது அஷ்ரப் (வயது 26), முஷ்டாக் ஹூசேன் (வயது 18).
இந்த குண்டு வெடிப்புக்கு ஏற்கனவே அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவு பொறுப்பேற்றிருந்தது. தற்போது முஜாகிதீன்எகிப்து என்ற இன்னொரு இயக்கமும் இதற்கு பொறுப்பேற்றுள்ளது.
அந்த இயக்கத்தின் இணையதளத்தில், எகிப்தில் நடந்த குண்டு வெடிப்பு ஒரு செயற்கையான நில நடுக்கம் தான். நாங்கள்ஏற்படுத்திய இந்த நில நடுக்கத்தில் 88 பேரின் உயிர்களை பறித்து விட்டோம்.
இதில் எங்களது இயக்கத்தை சேர்ந்த தியாகிகள் முகமது ஹமதி, பைசல் கலீல், ஹசன் அபிரவா, முகமது அப்துல் மஜீத், முகமதுஅப்துல் கனி ஆகியோரும் பலியாகி விட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications