கருணாநிதி முன் கை கலந்த உடன்பிறப்புகள்
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வரும் திமுக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டநிர்வாகிகள், கட்சித் தலைவர் கருணாநிதி முன்பே கைகலப்பில் ஈடுபட்டதால் அறிவாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் கருணாநிதி பேசினார். அப்போது அழகிரிக்கு ஆதரவான ஒருவரும்,தேனி மாவட்ட திமுக செயலாளரின் ஆதரவாளர் ஒருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஒருவர் மீதுஒருவர் சரமாரியாக புகார்களைத் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் தடித்த வார்த்தைகளை பேசியவாறே இருவரும் அடிதடியில் இறங்கினர். கருணாநிதி முன்பே இருவரும்ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனராம். இதைப் பார்த்த கருணாநிதி அதிர்ச்சியில் அப்படியேஅமர்ந்திருந்தாராம்.
அவருடன் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற தலைவர்கள் தலையிட்டு இருவரையும்பிரித்து சமாதானப்படுத்தினார்களாம்.
இந்த சம்பவம் கருணாநிதிக்கு பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாம். காங்கிரஸ் கட்சியை விட மிகக்கேவலமாக நடந்து கொண்டு விட்டார்களே என்று அவர் மூத்த தலைவர்களிடம் வேதனையுடன் கூறினாராம்.
இந் நிலையில் நேற்று கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கருணாநிதி பேசுவதாக இருந்தது.ஆனால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதேபோல இன்றும் கலந்தாலோசனை நடைபெறாது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட திமுகவினர் செய்த கலாட்டா காரணமாக கருணாநிதி அப்செட் ஆகியிருப்பதால் தான் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்குப் பிறகு தான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கருணாநிதி திமுகவினருக்குஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்கினார்.
கருணாநிதி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், திமுகவினர் மத்தியில் மனவிரோதம், குரோதம் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் அது அடிப்படையிலேயே விஷத்தைப் பாய்ச்சி விடும்.
ஒருவரையொருவர் மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். தலைவரைப் பின்பற்றுவதாக கூறும் நீங்கள்அவர்களைப் போல பொறுமையுடன் இருக்க வேண்டாமா? என்று ஏகப்பட்ட அறிவுரைகளை வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications