காவிரி: அதிமுக மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், காவிரி நதியின் நீரில்தமிழகத்திற்குரிய பங்கைத் தராததோடு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரைக் கூடமுறையாக வழங்காமல் உள்ளது கர்நாடகம்.

இந்தப் போக்கைக் கண்டிக்காமலும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தராமலும் உள்ள மத்திய அரசுஉரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 26ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பிரதமரை நானும்,மூத்த அமைச்சர்களும், கழக எம்.பிக்களும் சந்தித்து தமிழக கோரிக்கையை வலியுறுத்தினோம்.

ஆனால் பிரதமருடன் நடந்த சந்திப்பு எங்களுக்குத் திருப்தி தரவில்லை. பிரதமர் எந்தவித உத்தரவாதத்தையும்அளிக்கவில்லை. கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும்படி அவர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற எங்களதுகோரிக்கைக்கு அவர் எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை.

பிரதமரிடம் வலியுறுத்தியும், தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையிலும், கர்நாடக அரசு இந்தக்கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிலையிலும், மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் அலட்சியப் போக்குகளைக் கண்டித்தும்,

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரியும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு 28ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதஅறப்போராட்டத்தை நடத்திட கழகம் தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் அதிமுகவின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் கலந்துகொள்ள வேண்டும் என கூறியிருந்தார் ஜெயலலிதா.

இதன்படி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று காலை 10 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம்தொடங்கியது. சென்னையில் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலைமையில் தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகம்அருகே போரட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியஅரசுக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கும் எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதே போல மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+