கால்நடைகளுக்கு தடை: வாபஸ் பெற்றது கேரளா
சென்னை:
தமிழகத்திலிருந்து கால்நடைகளை எடுத்துச் செல்வதற்கு விதித்திருந்த தடையை கேரள மாநில அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக, கேரள எல்லையோர கிராமங்களில் இந்த மாட்டு வியாபாரம்மிகவும் பிரசித்தமாகும்.
சில வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் சில கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியது. இதையடுத்துதமிழகத்திலிருந்து கால்நடைகளை கொண்டு வருவதற்கு கேரள அரசு தடை விதித்தது.
இதனால் தமிழக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆந்த்ராக்ஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது, தற்போதுஆந்த்ராக்ஸ் இல்லை என்று தமிழக வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் கேரள அரசு செவி சாய்க்கவில்லை.
இந் நிலையில் தடையை நீக்கக் கோரி தமிழக விவசாயிகளும், கேரள மாட்டுத் தரகர்களும் பல்வேறு போராட்டங்களில்ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கேரள மாநில மருத்துவர் குழு தமிழகம் வந்து இங்குள்ள மருத்துவர்களிடம் ஆலோசனைநடத்தியது.
இதையடுத்து தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அந்த மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே தமிழக அரசும், தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக தற்போது தடையைகேரள அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக கால்நடைத்துறை இயக்குனருக்கு கேரள அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக அரசு எடுத்துள்ளதடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு திருப்தி அடைகிறது. இதனால் கால்நடைகளை கேரளாவுக்கு கொண்டு வருவதற்குவிதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
அதேசமயம், கேரளாவுக்குள் வரும் கால்நடைகள் அனைத்திற்கும் முறையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழுடன் வரும் கால்நடைகள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications