காவிரியை வைத்து நடக்கும் டிராமா: இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினையை வைத்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பிரமாதமான நாடகம் ஒன்றை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அணைகளும் நிரம்பிவருகின்றன. அணைகள் நிரம்பிய காரணத்தால் அவற்றை திறந்து விட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் அணை உடைந்துவிடும்.

இதைத் தெரிந்து கொண்டே தான் திமுகவினர் தங்களது தோழமைக் கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றுபிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

ஜெயலலிதா டெல்லி செல்லப் போவதை உணர்ந்து தான், அவருக்கு முன்பாக திமுக எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுபிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தது.

இதை விட பெரிய விஷயம் ஒன்று உள்ளது. கர்நாடக முதல்வர் தரம்சிங் தனக்கு சாதகமான நாளின் போது பிரதமருக்குவேண்டுகோள் விடுத்து தனக்கு உத்தரவிடுமாறு ஒரு கடிதம் எழுதச் சொல்லுவார். பிரதமரும் கடிதம் எழுதுவார்.

காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று அதில் கேட்டுக் கொள்வார். ஆனால் தானாகவே அணையிலிருந்து அப்போது தண்ணீர்போய்க் கொண்டிருக்கும்.

காவிரியை வைத்து இப்படி பெரிய டிராமாவே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆள்பவர்களால் இந்தப் பிரச்சினைக்குதீர்வு ஏற்பட்டதில்லை. ஆண்டவனாகப் பார்த்துத் தான் தமிழகத்தைத் காத்து வருகிறான்.

தமிழகத்தில் நதி நீரோட்டப் பற்றாக்குறை இல்லை, தேசிய நீரோட்ட பற்றாக்குறை தான் அதிகம் உள்ளது. அதனால் தான்தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. நடுவர் மன்றம் விரைவில் தனது தீர்ப்பை வழங்க வேண்டும். அதுஎப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை மிகக் கடுமையாக, உறுதியாக அமல்படுத்த வேண்டும்.

இதேபோல இன்னொரு டிராமாவும் திமுக வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்கள், முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுவிடுகிறார் கருணாநிதி.

இதை அடிப்படையாக வைத்து, அவற்றை கோரிக்கைகளாக வைத்து முன்கூட்டியே திமுக சார்பில் கோரிக்கைஎழுப்புவார்கள். தொடர்ந்து அறிக்கையும் வெளியிடப்படும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதும், இது தனது வெற்றி என்று அறிக்கை விடுவார் கருணாநிதி என்றுகருணாநிதியை கடுமையாக வாரினார் இல.கணேசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+