சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதா மனு
பெங்களூர்:
இளவரசி, டிடிவி தினகரனுக்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதாவும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, டிடிவி தினகரன் உட்பட 5 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நீதிபதி பச்சாப்பூரே முன்னிலையில் நடைபெற்று வருகிறது.சொத்துக் குவிப்பு வழக்குடன் லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளஇளவரசி தனது வழக்கறிஞர் மூலம் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.
இளவரசியின் மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில தினங்களில் இந்த வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள டிடிவிதினகரனும் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.
இதற்கும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக ஆட்சேபணை மனு ஒன்றையும் அவர்தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு நீதிபதி பச்சாப்பூரே நேற்று ஒத்தி வைத்தார். மேலும்அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உட்பட 5 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் அவர்உத்தரவிட்டார்.
பழி வாங்கும் நடவடிக்கை:
இந் நிலையில் தன்னையும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா தனதுவழக்கறிஞர் ஜோதி மூலம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு மாநில முதல்வர் மீது வழக்கு தொடர வேண்டும்என்றால் அந்த மாநிலத்தின் ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.
இதன் படி சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு தொடர்பாக 1997 மற்றும் 2003ம் ஆண்டில் அப்போதையஆளுநர்களிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் இந்த அனுமதி முறையாகப் பெறப்படவில்லை.
அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாகவே திமுக வழக்கு தொடர்ந்தது. எனவே இந்த வழக்கிலிருந்து என்னைவிடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications