ஆதி சங்கரர் பிறந்த இடத்தில் கலாம்
காலடி (கேரளா):
ஆதி சங்கரர் பிறந்த இடமான காலடியை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று பார்வையிட்டார்.
3 நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புதன் கிழமை கேரள மாநிலம் சென்றார். நேற்று (வியாழக்கிழமை) கேரள சட்டசபையில் கலாம் உரையாற்றினார். இதன் பிறகு திருவனந்தபுரத்திலுள்ள திருவிதாங்கூர் அரண்மனைக்குசென்று மன்னர் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.இதன் பின்னர் தும்பா ராக்கெட் ஏவுதளத்திற்கு சென்ற கலாம், எஸ்.எல்.வி.ராக்கெட் ஏவியதின் வெள்ளி விழாவில் பங்கேற்றார்.அங்கு ஆர்.எச். 200 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை கலாம் கண்டு களித்தார்.
இன்று கலாம், ஆதி சங்கரர் பிறந்த இடமான காலடிக்கு சென்றார். 1200 வருடங்களுக்கு முன் பிறந்த ஆதி சங்கரர் நினைவாகஅங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலுக்கும் கலாம் சென்றார். அவருக்கு கோவில் பூரண கும்ப மரியாதையுடன்வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலாம் கலந்து கொண்டார். அவருக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பின் ஆதிசங்கரரின் தாய் சாரதாம்பாளின் சமாதியிலும் கலாம் அஞ்சலி செலுத்தினார்.
கலாமுக்கு சிருங்கேரிர மடத்தின் தலைமை குரு பாரத தீர்த்த மகா சுவாமிகள் நினைவுப் பரிசை வழங்கினார்.
பின்னர் காலடியிலுள்ள சங்கரா என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications