மும்பையில் அணை உடைந்ததாக வதந்தி: நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் அணை உடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் பதட்டமடைந்து ஓடும்போது ஏற்பட்ட நெரிசலில்சிக்கி 7 குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர்பலியாகி விட்டனர்.

இந் நிலையில் நேற்று நள்ளிரவில் மும்பையில் சுனாமி ஏற்பட்டு விட்டதாகவும், அதன் காரணமாக அணை உடைந்துவிட்டதாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து சாந்தா குரூஸ் அருகே உள்ள நேரு நகர் என்ற பகுதியில் மக்கள் பதட்டமடைந்துஓடினர்.

ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து அங்குமிங்கும் ஓடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர்பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 7 பேர் குழந்தைகள். இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் கூப்பர் மருத்துவமனை மற்றும் நானவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தால் பலியானவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து கூப்பர் மருத்துவமனை அருகே மறியலில்ஈடுபட்டனர்.

விபத்து நடந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் டிவி மூலம் போலீஸார் வதந்தியை நம்ப வேண்டாம்என்று போலீஸார் கூறிய தகவலால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இதற்கிடையே இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. அந்தபகுதியில் நேற்று இரவு முழுவதும் கடும் பதட்டமும் அச்சமும் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+