கடலூர் சிறையில் செல்போன்கள்! அதிகாரிகள் அதிரடி சோதனை
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பலரிடம் செல் போன்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்துசிறைத்துறை டிஐஜி குமாரசாமி தலைமையிலான அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர் மத்திய சிறையில் பிரேமானந்தா, சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள பல கைதிகளிடம் செல்போன்கள் உள்ளிட்டவை இருப்பதாக சிறைஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறைத்துறை டிஐஜி குமாரசாமி தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை கடலூர் சிறையில்அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கைதிகளிடம் செல்போன்கள் இருக்கிறதா என்பது குறித்தும், ஆயுதங்கள் ஏதாவது பதுக்கிவைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மதுரையில் கைதிகள் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு சரியான மருத்துவ வசதி செய்து தரப்படாததைக் கண்டித்து 2000க்கும்மேற்பட்ட கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சரியான மருத்துவ வசதியை செய்து தருவதில்லை என்றுஅவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சரியான மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களில் 7 கைதிகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் மருத்துவ வசதி செய்து தரக் கோரி 2000க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம்மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து சிறைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications