ராஜீவ் கொலை: மாஜி சிபிஐ அதிகாரியின் வீடியோ
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை குறித்த வீடியோ படத்தை மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.
ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் ராஜீவ் காந்தி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், ஸ்ரீபெரும்புதூரில்கொல்லப்பட்டது, தணு மற்றும் சிவராசன் ஆகியோர் இலங்கையில் பயிற்சி பெறுவது மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் பேட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தணு என்ற பெண் மனித வெடிகுண்டால்கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறைவிசாரணை நடத்தியது.
ராஜீவ் காந்தி கொலை குறித்து பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி குற்றப்பத்திரிகை என்ற படத்தை தயாரித்தார். ஆனால்இந்தப் படத்திற்கு இதுவரை சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.
இந் நிலையில் சிபிஐயின் முன்னாள் எஸ்.பி. ரகோத்தமன், ராஜீவ் காந்தி கொலை குறித்து ஒரு வீடியோ படத்தைதயாரித்துள்ளார். இதற்கு மத்திய சென்சார் போர்டும், சிபிஐயும் அனுமதி வழங்கியுள்ளது.
சிபிஐயில் எஸ்பியாக இருந்த ரகோத்தமன் கடந்த மார்ச் மாதம் தான் ஓய்வு பெற்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவரும்முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தார்.
இந்த வீடியோ படம் சென்னையில் வெளியிடப்பட்டது.விசிடியாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் 60 நிமிடம் ஓடுகிறது.இதில் பெண் மனித வெடிகுண்டு தணு, இலங்கையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது,
பெங்களூரில் சிவராசன் தற்கொலை செய்து கொண்டது, பிபிசி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்ராஜீவ் கொலை குறித்து பேட்டியளித்தது, ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தது, போரூரில்நடந்த கூட்டத்தில் ராஜீவ் பேசுவது, ஸ்ரீபெரும்புதூருக்கு வருவது மற்றும் குண்டு வெடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து ரகோத்தமன் கூறுகையில், நான் சிபிஐயில் 36 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். ராஜீவ் கொலை வழக்குக்காகவே10 வருடங்கள் செலவழித்துள்ளேன். 4 மாதங்களாக மிகவும் கஷ்டப்பட்டு சுமார் ரூ. 4 லட்சம் செலவழித்து இந்தடாக்குமெண்டரி படத்தை தயாரித்துள்ளேன்.
எனக்கு முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் உட்பட எனது மூத்த பல அதிகாரிகள் இந்தப் படத்தை தயாரிக்க மிகவும்உறுதுணையாக இருந்தனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications