ஸ்டாலின் மீது வழக்குத் தொடர காளிமுத்து அனுமதி
சென்னை:
சென்னை நேப்பியர் மேம்பால விரிவாக்கப் பணியில் நடந்த ஊழல் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தமு.க.ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சட்டசபை சபாநாயகர் காளிமுத்து அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை காமராஜர் சாலையில், அண்ணா சமாதிக்கு அருகே உள்ள பழைய நேப்பியர்பாலத்திற்கு அருகே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. மாநகராட்சி சார்பில் இந்த பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.புதிய பாலம் கட்டும் பணியில் முறைகேடு நடந்ததாக கூறி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மேயராக இருந்தமு.க.ஸ்டாலின், 8 மாநகராட்சிப் பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் 8 மாநகராட்சிப் பொறியாளர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாநகராட்சி துணை மேயர் கராத்தேதியாகராஜன் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இவர்களில் 5 பேர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மு.க.ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் காளிமுத்துவிடம்அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டது. இக்கடிதத்தைப் பரிசீலனை செய்த காளிமுத்து, தற்போது ஸ்டாலின் மீது வழக்கு தொடரஅனுமதி அளித்துள்ளார்.
இருப்பினும் கருணாநிதி மீது வழக்குத் தொடர காளிமுத்து அனுமதி அளித்ததாக தெரியவில்லை.
ஸ்டாலின் மீது வழக்குத் தொடர அனுமதி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கையை விரைவில் தாக்கல் செய்யலஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications