போலி முத்திரைத்தாள்: டிஜிபி பதவி நீக்கம்: ஐஜி சஸ்பெண்ட்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமித் வர்மா அப்பொறுப்பிலிருந்துமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே போல ரயில்வே ஐ.ஜிராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் போலி முத்திரைத்தாள் மோசடி விவகாரம் தமிழகத்திலும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 2காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இருவரும் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி.அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் மேலும் சில காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்புஇருப்பதாக செய்திகள் வெளியாகின. அவர்களில் முக்கியமானவர் அமித் வர்மா. சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாகதற்போது அமித் வர்மா உள்ளார்.
அவரை சிபிஐ கூட விசாரித்தது. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது தமிழக அரசு.
இந் நிலையில் அமித் வர்மா மீது இப்போது திடீரென நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கூடுதல் டிஜிபிபொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல ரயில்வே ஐஜியாக இருந்து வந்த ராதாகிருஷ்ணனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கும் போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.
இவர்கள் தவிர டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகவும்விரைவில் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications