தா.கி. வழக்கு: வேறு மாவட்டத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரையிலிருந்து, வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரியமனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் கடந்த 2003ம் ஆண்டு மே 20ம் தேதி அதிகாலையில் தா.கிருட்டிணன் வாக்கிங் சென்றபோதுபடுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட 13பேர் கைது செய்யப்பட்டனர்.அழகிரி, ஸ்டாலின் கோஷ்டி மோதலின் விளைவாகவே தா.கி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
இந்த வழக்கு தற்போது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தனக்கு பல்வேறுதரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாக வழக்கை விசாரித்து வந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மாவட்ட தலைமை செஷன்ஸ்நீதிபதிக்கு கடிதம் எழுதினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
அதேசமயம், வழக்கை விசாரிக்கும் நீதிபதி, மு.க.அழகிரிக்கு மிகவும் வேண்டியவர். எனவே நீதிபதியை மாற்ற வேண்டும்என்று கோரி அண்ணா நகர் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந் நிலையில், தா.கி.யின் தம்பி ராமையா உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்குமதுரையில் விசாரிக்கப்பட்டால் நீதி கிடைக்காது. மேலும், நீதிபதி குற்றவாளிகளில் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர்என்று கூறப்படுகிறது. எனவே வேறு மாவட்டத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, ராமையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். விசாரணையை வேறுமாவட்டத்திற்கு மாற்றினால்,அது மேலும் கால தாமதத்திற்கே வழி வகுக்கும். நீதிபதியின் விசாரணை குறித்து சந்தேகப்படத்தேவையில்லை.
மேலும், வழக்கை இழுத்துக் கொண்டே போனால் சாட்சிகளின் ஞாபக சக்தி குறைந்து போய் அவர்களால் நடந்த சம்பவத்தைதெளிவாக கூற முடியாத நிலை ஏற்படும்.
எனவே மதுரை நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறும். விசாரணையை விரைவில் முடிக்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications