மும்பையில் தொடரும் மழை: பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியது
மும்பை:
மும்பையில் இன்றும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை1000ஐ தாண்டி விட்டது. மகராஷ்டிர மாநிலத்தில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிர மாநிலதத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 100வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்துவருகிறது.மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டி விட்டது. மும்பையில் மட்டும் 600க்கும்மேற்பட்டோர் பலியாகி விட்டனர். கன மழை காரணமாக மும்பை விமான நிலையம் 3 நாட்கள் மூடப்பட்டது.
ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறிது மழை ஓய்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் மும்பையில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதனால் மும்பையில் அந்தேரி, சாந்தா குரூஸ், பாந்த்ரா, மரோல், காக்கி நாகா, வடலா, குர்லா, சுனா பட்டி, செம்பூர் மற்றும்தானே ஆகிய பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
இதனால் மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
கனமழையைத் தொடர்ந்து பஸ், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்களும் மிகவும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications