முத்திரைத் தாள்: முகமது அலி மீது விரைவில் குற்றப்பத்திரிகை?
சென்னை:
முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டிஐஜி முகமது அலி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்நடவடிக்கையில் சிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.
நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் போலி முத்திரைத் தாள் மோசடி விவகாரம் தமிழகத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி உதவி கமிஷனர் சங்கர் ஆகிய 2காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இருவரும் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி.அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமித் வர்மா உட்பட மேலும் சிலகாவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அமித் வர்மாவை சிபிஐ விசாரித்தது. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது தமிழகஅரசு.
இந் நிலையில் அமித் வர்மா மீது கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கூடுதல் டிஜிபி பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இதேபோல ரயில்வே ஐஜியாக இருந்து வந்த ராதாகிருஷ்ணனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கும் போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு சிபிஐ தயாராகி வருகிறது. இதன்படி டி.ஐ.ஜி. முகமது அலி, உதவிகமிஷனர் சங்கர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சிபிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.
முகமது அலி, மற்றும் சங்கர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லைஎன்று அப்போது சிபிஐ குற்றம் சாட்டியது.
தற்போது தமிழக அரசின் அனுமதிக்காக சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அமீத் வர்மா, ராதாகிருஷ்ணன்ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் முகமது அலி மீதும்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கும் என்று சிபிஐ கருதுகிறது.
இதனால் முத்திரைத் தாள் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications